Breaking News

அரசு மருத்துவமனையில் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட ஊசி பரிதாபமாக உயிரிழந்த பெண்

தஞ்சை, நவ.2-

தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஊசியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 



இளங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற அந்தப் பெண் இரண்டாவது பிரசவத்துக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட லட்சுமியை அவரது கணவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்ததில் லட்சுமியின் வயிற்றில் உடைந்துபோன ஊசியின் பாகம் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தஞ்சை அரசு மருத்துவமனைக்குத் தெரியவந்து அவர்கள் ஆம்புலன்சை அனுப்பி வலுக்கட்டாயமாக லட்சுமியை அழைத்துச் சென்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் என்றும் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் லட்சுமியின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தபட்ட மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்துவதாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்தார்.


No comments

Thank you for your comments