மீன் சந்தை டென்டரை வெளிப்படையாக நடத்த கோரி மீன் வியாபாாிகள் மனு...
திருப்பூா்
மீன் சந்தை டென்டரை வெளிப்படையாக நடத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நலசங்கத்தின் சாா்பாக இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நலசங்கத்தின் சாா்பாக இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில் கோரியிருப்பதாவது , தென்னம் பாளையம் மொத்த மீன் வியாபாாிகள், மொத்த வியாபாாிகளுக்கு மட்டும் மொத்த வியாபாரம் செய்யவும், சில்லரை வியாபாரத்தை தனிமை படுத்தி விற்பனை செய்யவும், ஸ்மாா்ட் சிட்டியில் கட்டபடும் மீன் சந்தை டென்டரை தனிநபருக்கு விடாமல் வெளிப்படை டென்டா் அறிவிப்பு வெளியிடமாறும் மனுவில் குறிப்பிட பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் சு. பாா்த்தசாரதி மாவட்டசெயலாளா் கோடை சே .அப்துல்காதா், மாவட்ட இனைசெயலாளா் பி.செல்வா, மாவட்டசெயற்குழு அப்துல்ரகிம், தேவேந்திரன், கற்பகமணி, ரபிக், துனை ஒருங்கினைப்பாளா் அமீது, மாநகர துனைத்தலைவா் திருநாவுக்கரசு, மாநகரச்செயலாளா் ரகுமத்துல்லா உட்பட பலா் கலந்து கொன்டனா்.

No comments
Thank you for your comments