Breaking News

கழிவுநீர் கால்வாய்களில் சாயக்கழிவுகள் சங்கமம்!

 பள்ளிபாளையம், நவ.16-

பள்ளிபாளையம் கழிவுநீர் கால்வாய்களில் சாயக்கழிவுகளே மிகுந்து வருகின்றன என வேதனையோடு கூறுகின்றனர் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும்... 

குமராபாளையம் தொகுதியில் உள்ள  பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சாக்கடைக் கால்வாய்களில் எந்த நேரமும் சாயத்தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதாகவும் அதுவும் மழைக்காலங்களில் சர்வ சாதாரணமாக சாயத்தண்ணீர் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

சாக்கடையில் சாயத்தண்ணீர் குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆதவனிடம் பேசும்போது, இந்த சாக்கடைக் கால்வாய் மூலம் வெளியேறும் சாயத்தண்ணீரானது நேரடியாக காவிரி ஆற்றில் தான் கலக்கிறது. சிலநேரங்களில் ஆற்றின் ஓரங்களில் தேங்கி நிற்கும் சாயக்  கழிவுநீரை  குடிக்கும் நாய்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில்  அவை மக்களிடையே இரண்டறக் கலந்துள்ளதால் இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். புகார்கள் அளித்தாலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாயக்கழிவுநீர் குறித்து அளிக்கும் புகார்கள் அனைத்தும் சாக்கடைக்குள் விழுந்த பிரியாணி போலவே கிடக்கிறது என வேதனையோடு தெரிவிக்கிறார். 

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே மிக பெருத்த கேள்வியாக உள்ளது...  நடவடிக்கையா... நாட்டாமையா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்...!

No comments

Thank you for your comments