Breaking News

2 மின்மாற்றிகளை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்

காஞ்சிபுரம், நவ.16:

காஞ்சிபுரத்தில் 2 மின்மாற்றிகளை உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை நடேசன் நகரில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய மின்மாற்றி அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் உத்திரமேரூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் - வான க.சுந்தரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு  சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோன்று ஓரிக்கை அப்பாவு நகரில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியையும் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய காஞ்சிபுரம் வடக்கு செயற்பொறியாளர் சரவணத்தங்கம், இணை செயற்பொறியாளர் இளையராஜா, காஞ்சிபுரம் உதவிப் பொறியாளர் சிவானந்தம், திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், நிர்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments