தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா : அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு விதிவிலக்கு தர எம்பிக்கள் கமிட்டி பரிந்துரை
புதுடெல்லி, நவ.23-
தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா விதிகளில் இருந்து அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு விதி விலக்கு தர எம்பிக்கள் கமிட்டி தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கமிட்டியின் அறிக்கைக்கு எதிரான மாறுபட்ட பரிந்துரைகளை தனியாக சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த மசோதாவின் ஷரத்துக்கள் அரசு ஏஜென்சிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்விதிவிலக்கு அளிக்க வகை செய்கிறது அதனால் இந்த மசோதாவை நாடாளுமன்ற எம்பிக்கள் கூப்பிட்டு கமிட்டியின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதன் பேரில் தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டு கமிட்டியின் தலைவராக மீனாட்சி லேக்கி இருந்தார். அவர் இப்பொழுது மத்திய அமைச்சர் ஆகிவிட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக பிபி சவுதாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா குறித்து பரிசீலனைகள் எம்பிக்கள் கூட்டு கமிட்டியில் நடைபெற்றன.
ஆனாலும் ஒருமித்த கருத்துக்கு எம்பிக்கள் கூட்டு கமிட்டியால் வர முடியவில்லை அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது அதன்படி தேசிய நலன்கள், அரசின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, இறையாண்மை, இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகிய பிரச்சனைகளில் விசாரணை அமைப்புகளுக்கு முழு விதிவிலக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கலாம் என்று இப்பொழுது எம்பிக்கள் கூட்டு கமிட்டி பரிந்துரை வழங்கியிருக்கிறது
அத்துடன் குற்றங்கள் நிகழாமல் தடுக்க வும் சட்டமீறல்களை தடுக்கவும் தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு மசோதா விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு எம்பி மாறுபடுகின்ற டிஸ்செண்ட் நோட் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மாறுபடும் குறிப்பு தாக்கல் செய்வதற்கு முன்னால் கமிட்டித் தலைவரிடம் எதிர்க்கடசி எம்பிக்கள் கருத்து ஒன்றை தெரிவித்தனர்.
அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு தனிநபர் சொந்த விவர பாதுகாப்பு சட்ட மசோதா விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிப்பதற்கு சட்ட மூலம் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கு முன்னால் இது குறித்து நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி பரிசீலனை செய்ய கமிட்டி பரிந்துரைக்க முன்வந்தால் எங்கள் எதிர்க்குறிப்புகளை விலக்கிக் கொள்கிறோம் என்று நாடாளுமன்ற கமிட்டியின் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்பிக்கள்கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை நாடாளுமன்ற கமிட்டி தலைவர் சவுதாரி மறுத்துவிட்டார்
அதைத் தொடர்ந்து மாறுபடும் குறிப்புகள் தனித்தனியாக கமிட்டி தலைவருக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தனி நபர் உரிமைகளை அப்பட்டமாக மீறுகிற இந்த சட்ட விதிகளை ஒருபோதும் நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை. எனவே இந்தச் சட்டம் ஒருபோதும் அமல் செய்யப்பட வாய்ப்பு கிடையாது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உறுதியாக தெரிவித்தார்
குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுமையும் பேகசுஸ் பிரச்சனை ஆக்கிரமித்து கொண்டது. வேறு விஷயங்களை கவனிப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. இப்பொழுது தனிநபர் சொந்த விவரம்விபரப் பாதுகாப்பு மசோதா அந்த இடத்தை அடைத்துக் கொள்ளப் போகிறது.
குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் தனிநபர் சொந்தப் பாதுகாப்பு மசோதா ஆக்கிரமித்துக் கொண்டால் அது புதிராக அமையாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்
No comments
Thank you for your comments