செலுத்திய வரியை திரும்பப் பெறக் கோரி 14 நிறுவனங்கள் மத்திய அரசுக்கு மனு
புதுடெல்லி, நவ.23-
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் பின் தேதியிட்ட வரி வசூல் நடவடிக்கை அனைத்தும் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
பின் தேதியிட்ட வரி வசூல் உத்தரவு பெட்டி தங்களிடம் வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த தொகையை அரசு திருப்பித் தர வேண்டும் என்று கோரி 14 நிறுவனங்கள் மனு செய்துள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் தருண் பாஜ்பாய் வெளியிட்டுள்ளார்.
அரசு தன்னுடைய உத்தரவில் பின் தேதியிட்ட வரிவசூல் உத்தரவுப்படி வசூலிக்கப்பட்ட தொகையை வட்டி இல்லாமல் அரசு திருப்பிச் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய திருத்த உத்தரவின்படி 14 கம்பெனி தங்களிடம் வசூலித்த வரித் தொகையை திரும்ப செலுத்தும்படி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மத்திய அரசு 17 நிறுவனங்களிடம் இருந்து பின் தேதியிட்டு வரி வசூல் அறிவிப்புகளை அனுப்பி உள்ளது.
அவற்றில் 14 நிறுவனங்கள் செலுத்திய வரித் தொகையை திருப்பிச் செலுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளன.
No comments
Thank you for your comments