Breaking News

கோவை மாவட்டக் கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி

கோவை:

உதயநிதி ஸ்டாலின்  44வது பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  44வது பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியினை   தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வி.செந்தில் பாலாஜி  வழிகாட்டுதலின்படியும்,  கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எக்ஸ்.எம்.எல்.ஏ சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,  தொண்டாமுத்தூர் ஒன்றிய  அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில்  தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய    பொறுப்பாளர்  தொ.அ. ரவி  தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னமநல்லூர் ஊராட்சி திமுக கழக செயலாளர்  வழக்கறிஞர் ஆர்.தென்னைசிவா, கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஆ.முத்துக்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





No comments

Thank you for your comments