விவசாயிகள் கோரிக்கைகள் மனுவை ராக்கெட் விடும் நூதன உண்ணாவிரதம் போராட்டம்
திருச்சி:
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோரிக்கைகள் மனுவை பிரதமர் மோடிக்கு ராக்கெட் விடும் நூதன உண்ணாவிரதம் (06.11.2021 இன்று 26ம் நாள்) நடைபெற்றது.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 06.11.2021 சனிக்கிழமை காலை 9 மணிக்கு 26ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு மோடி ஐயா தராததால், விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனு-வை ராக்கெட் மூலம் டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பி வைக்கும் நூதன உண்ணாவிரதம் போராட்டம் துவங்கினர்..
உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் விபரம்:
1. P. அய்யாக்கண்ணு மாநில தலைவர் திருச்சி.
2. பெரியசாமி - தெற்கு சிறுப்பதூர், திருச்சி.
3. சுபையா - கோலார்பட்டி, திருச்சி.
4. மண்டையோடு ராஜேந்திரன் - சிந்தாமணி, திருச்சி.
5. AP செல்வம் - சிந்தாமணி, திருச்சி.
6.தெய்வானை - ஒட்டக்குடி, திருச்சி.
7. குணசேகர் - ஈச்சம்பட்டி, திருச்சி.
8. கண்ணுசாமி - தெற்குசேர்பட்டி, திருச்சி.
9. கிருஷ்ணமூர்த்தி - போயனம்பாடி, கடலூர்.
10. மாயவன் - வேப்பூர், கடலூர்.
11. ராஜேந்திரன் - பாலப்பட்டி, திருச்சி.
12. கவியரசு - பெரிய நசலூர், கடலூர்.
13. ராஜா - வரம்பனூர், கடலூர்.
14. நீலகண்டன் - பெரியநசவலூர், கடலூர்.
15. தங்கராசு - ராயப்பட்டி, திருச்சி.
16. ஜெகதீசன் - ராயப்பட்டி, திருச்சி.
17. சுரேஷ்குமார் - கூகுர், திருச்சி.
No comments
Thank you for your comments