நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு.
முக்கிய தலைவர்கள் பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நல்லெண்ன அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கற்பழிப்பு, தீவரவாதம், சாதி, மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments