Breaking News

தண்ணிரில் தத்தளிக்கும் கிராம மக்கள்..!

போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் மாரியம்மன் கோவில் தெருவில் 15 ஆண்டுகளாக தண்ணிரில் தத்தளிக்கும் கிராம மக்கள்...  புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். 

இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கவில்லை.... இதனால் மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. 

மேலும் இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் அடைந்து இருக்க வேண்டிய அவல நிலையில் தவித்து வருகின்றனர். 

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இந்நாள் வரையில் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தரப்பில் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போது பெய்துவரும் கன மழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. அடிப்படை தேவைக்கு அல்லல் படுகின்றனர் அப்பகுதி மக்கள்.. 

தேங்கும் மழைநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்

எனவே அதிகாரிகள் விரைந்து இப்பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... 


அவர்களது கோரிக்கை நிறைவேறுமா...? வழக்கம்போல் கிடப்பில் கிடக்குமா...? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்... துறையா... துரிதமா... 


No comments

Thank you for your comments