வேலூரில் தொடரும் கொலை....! காரணம் என்ன?
காட்பாடி, நவ.15-
இரு இளைஞர்களை அடித்துகொலை செய்து ஆற்றில் கல்லை கட்டி வீச்சு 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை ...
![]() |
உயிரிழந்தவர்கள் |
வேலூர்மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த செந்தில் (எ) விஜய் (23). இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். அவரது நண்பர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்ற படித்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த நேசகுமார் (24), அதே கிராமத்தை சேர்ந்த ரோகித் (19) ஆகிய மூன்று பேரும் பாலாற்றங்கரையோரம் விருதம்பட்டு பகுதியில் வந்துள்ளனர்.
![]() |
உயிரிழந்தவர்கள் |
அங்கு விருதம்பட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் ஆகாஷ்(17), சரத்(19), பாலா(25) ஆகிய 6 பேரும் கஞ்சா அடித்துள்ளனர். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சேர்ந்து விஜய் மற்றும் நேசகுமாரை அடித்துகொலை செய்து பாலாற்றில் உள்ள சேற்று பகுதியில் கல்லை கட்டி உடல்களை வீசியுள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இந்த கொலை நடந்துள்ளது.
இதுகுறித்து காட்பாடி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படை ஆகாஷ், சரத், பாலா மற்றும் ரோகித் ஆகிய 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதாலும் அப்பகுதி சேறு சகதியுமான பகுதி என்பதால் உடல்களை மீட்டு பணிகள் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட விஜய் மற்றும் நேசகுமார் ஆகியோரின் பெற்றோர்கள் காட்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கஞ்சா போதையால் தங்களின் பிள்ளைகள் கொலையானதாகவும் குற்றவாளிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாக கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் காவல் நிலையத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றி காட்பாடி காவல்நிலைய கேட்டை இழுத்து முடினார்கள்.
இதே போல் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் வேலூரில் கஞ்சா போதையில் ஏற்பட்டதகராறி ஒரு இளைஞரை கொலை செய்து தோட்டப்பாளையம் பகுதியில் புதைத்தனர்.
தற்போது காட்பாடியில் பாலாற்றில் கஞ்சா போதையில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை கொலை செய்து புதைத்துள்ளனர். நாளுக்கு நாள் வேலூரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் கொலைகளும் நடக்கின்றது.. இதனை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்
No comments
Thank you for your comments