Breaking News

கனமழையால் வீட்டின் மீது சரிந்து விழுந்த ராட்சத பாறை!

வேலூர், நவ.16-

வேலூரில் தொடர் மழையால் பெரிய பாறை மலையிலிருந்து உருண்டு விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காகித பட்டறை பகுதியில் தொடர் மழையால் மண் சரிந்து அப்பகுதியில் இருந்த பெரிய பாறை மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. ஏற்கனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அங்கே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மலைப்பகுதியில் வீடுகட்டி வசித்து வந்த, நிஷாந்தி, ரமணி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து குடிசை வீட்டின் மீது 15 டன் அளவுள்ள பெரிய பாறை ஒன்று வீட்டில் விழுந்து நசுங்கியது. பாறைக்கடியில் 2 பேர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகள் நடந்தது. இதில் ரமணி, நிஷாந்தி உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

மலைவாழ் மக்களின் போக்குவரத்து பாதிப்பு

வேலூர், நவ.16-

துத்திக்காடு கிராமத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைகிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது தெள்ளை மலை கிராமம். சுமார் 200 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடை, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அன்றாட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துத்துக்காடு கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 6 இடங்களில் காட்டாறு செல்கிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் இந்த காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மலைவாழ் மக்கள் மிகவும் சிரமப்படுவதுடன், வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கணியம்படி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், துத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஊராட்சி செயலாளர் பாபு உள்ளிட்டோர் ஆற்றில் மழை நீர் செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மலை கிராம மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்குள்ள இருளர் காலனி பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

No comments

Thank you for your comments