நோய் தொற்றை உருவாக்கும் வட்டாட்சியர் அலுவலகம்
தருமபுரி, நவ.16-
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் முக்கிய பகுதியாக இருக்கிறது. தங்களின் குறைகளை தீர்ப்பதற்காக தினந்தோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் கிடையாது... கழிவறைகள் கிடையாது.. அலுவலக பகுதியில் பொதுமக்கள் தரையில் அமரும் சூழலே உள்ளது.. இது பற்றி பலமுறை புகார்கள் அளித்தும், செய்திகள் வந்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைப்பு வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குகிறது.. அங்கே சுத்தம் இல்லையா என்று ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்.. ஒரு தாலுகாவில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தில் சுத்தமில்லை கொசுக்களை வளர்க்கும் பண்ணைகள் எப்படி இருக்குமோ அதுபோல் வட்டாட்சியர் அலுவலகம் சுற்றிலும் விஷச் செடிகள் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு எந்த சுகாதாரத்துறை அமைப்பு அபராதம் விதிக்காதா... சுகாதாரம் மக்களுக்கும் மட்டும்தான... அரசு அலுவலகங்களில் இல்லையா என்ற கேள்வி எழுகின்றன... அதிகமான செடிகள் இங்கு இருப்பதால் மற்றும் அலுவலகத்திற்கு பகுதியில் சிறு வாய்க்காலில் சாக்கடைகள் ஓடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் கொசுக்கள் அதிகமாக பரவுகிறது.
இதனால் வட்டாட்சியல் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொது மக்கள் கொசுக்கடி தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு வெளியே நிற்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் உருவாகலாம்.. புதிய வைரஸ் தொற்று உருவாகலாம்... இதை வட்டாட்சியர் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
அலுவலகத்தின் அருகே உள்ள இடத்தை சுத்தம் செய்து சிறு பூங்கா அமைத்து பொதுமக்கள் அமர்வதற்கான ஒரு சூழலை அமைத்துத் தரவேண்டும். உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றுவதை விட வட்டாட்சியர் அலுவலகம் அசுத்தமான இடத்தில் இருந்து காப்பாற்றினால் போதும்... வந்து செல்லும் மக்கள் நோய் நொடி இல்லாமல் தங்களுடைய குறைகளை தீர்த்து விட்டு செல்வார்கள் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments