Breaking News

மக்கள் தொண்டன் திருமாறன் சேர்மன் இடம் கோரிக்கை மனு..

திட்டக்குடி:

கடலுர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மக்கள் தொண்டன் திருமாறன் இவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேர்மன் கேஎன்டி சுகுணா சங்கர் அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.



மனுவில் கூறியதாவது கல்லூர் கிராமத்தில் வீடு இல்லாதோற்கு காண்கிரிட் வீடு கட்டிதரவேண்டும்,பொதுகழிப்பறை வசதி,பாதுகாப்பான குடிநீர்,அணைத்து தெருக்களிலும் பிவிசி குழாய் மூலம் வடிகால் வசதி,அனைத்து தெருக்களை அகலப்படுத்தி சலவைக்கல் பதித்த தெருசாலை அமைத்தல்,

வீட்டுமனை பட்டா இல்லாதோருக்கு இலவச மனை பட்டா வழங்கவும், பழைய மாரியம்மன் கோயில் அருகே கிழக்கு மற்றும் விநாயகர் கோவில் பகுதியில் கோபுரமின்விளக்கு,கிராமத்திலுள்ள ஏரி குளம் குட்டையை ஆழப்படுத்தி விவசாய பாசனத்திற்கு கரை அமைத்து பனைவிதை நட வேண்டும்,ஆதிதிராவிடர் மயான பகுதியை சீரமைத்து மின்விளக்குடன் தரமான சாலை எரிக்கொட்டைகை அமைத்துதரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெண்களுக்கு மகளிர் சுயகுழு மூலம் கூடுதல் கடன்பெற நடவடிக்கை மேற்கொள்ளவும்,உடற்பயிற்சி கூடம் சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

உடன் துணைலைவர் வெள்ளையம்மாள் ஜானகிராமன்,வழக்கறிஞர் சதீஷ் இருந்நனர்.

No comments

Thank you for your comments