Breaking News

சோழவரம் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது... அதிகாரிகள் மெத்தனம்... பொதுமக்கள் முயற்சி...

வேலூர்:

வேலூர் அடுத்த சோழவரம் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் உள்ள  ஏரி நிரம்பி கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்தது.  இதனால், நெல் பயிர்கள், வீடுகள் தண்ணீர் சூழ்ந்து சேதமாகி உள்ளன. 


இதுவரையிலும், சோழவரம் ஆதிதிராவிடர் காலணி பகுதியில்  எந்த ஒரு அதிகாரிகளும் வரவும் இல்லை, கண்டுக் கொள்ளவும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

இதனால் அப்பகுதி மக்களே V.C.K.கணியம்பாடி ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலமையில், கிருஷ்ணமூர்த்தி சரத், நவின் மற்றும் இளைஞர்களை ஒன்று சேர்த்து  ஏரி,  கால்வாய் மணல் மூட்டை கொண்டு நீர் வேளியே வராதபடி அடைத்தனர். 

No comments

Thank you for your comments