Breaking News

பேரிடர் காலத்தில் அவசர உதவிக்கு அழைக்க அறிவிப்பு

கோவை, நவ.15-

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் மற்றும் மத்வராயபுரம் ஊராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ரெட்அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழை காரணமாக அனைத்து குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சரியான அளவு குளோரின் பயன்படுத்துதல் போன்ற பணிகள் மற்றும் பேரிடர் காலத்தில் அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அனைத்து ஊராட்சி பகுதிகளில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. 


மேலும் குழந்தைகளுக்கு வடிகட்டிய சுத்தமான குடிநீரே கொடுக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பதாகைகள் ஊராட்சி முழுவதும் வைக்கப்பட்டும், பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். மற்றும் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமும் ஊராட்சி முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகின்றன. மழையின் காரணமாக பேரிடர் காலங்களில் இழப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் கிட்டுசாமி மற்றும் செயலர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.


No comments

Thank you for your comments