பூண்டி ஏரியின் உபரி நீர் வெளியேற்றம் காவல்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
திருவள்ளூர், நவ.10-
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கனஅடியாக உயர்வு. அதனால், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 35 அடியில் 34.58 அடியை எட்டியுள்ளது மேலும் செவ்வாய் அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட 1000 கனஅடி தண்ணீர், செவ்வாய் இரவு பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என எதிர்பார்க்கும் நிலையில், பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பினாலும் அணையின் பாதுகாப்பு கருதி பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உபரி நீர் திறப்பு அதிகப்படுத்தபட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் 30 கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் , வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் பூண்டி அணைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்
No comments
Thank you for your comments