Breaking News

ஜனவரியில் இருந்து ஆடைகள் காலணிகள் விலை உயர்வு

Click Here => Join the Telegram
Follow @ Google News

சென்னை, நவ.23-

ஆடைகள் மற்றும் காலாணிகள் மிதான ஜிஎஸ்டி விகிதத்தினை அரசு 5%ல் இருந்து 12% அதிகரித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி விகிதமானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக ஜனவரிக்கு மேல் ஆடைகள் மற்றும் காலணிகள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் படி 2022ம் ஆண்டு முதல் ஜனவரி 1 முதல் 5%ல் இருந்து 12% ஆக ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி அதிகரிப்பானது ஆடைகள், செயற்கை நூல், துணிகள், போர்வைகள், டெண்ட், மேஜை துணிகள், கம்பள விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களுக்கு 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நூல் உள்ளிட்ட மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் ஜவுளித் துறையானது பெரும் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here => Join the Telegram
Follow @ Google News

குறிப்பாக நூல் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு பின்னலாடை விலையை 20% வரை உயர்த்த சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்) முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது குறித்து வெளியான அறிக்கையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியானது கொரோனா இராண்டாவது அலையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் பிறகு தற்போது ஓரளவுக்கு மீண்டு வரும் நிலையில், முக்கிய மூலப்பொருளான நூலின் விலை திடீரென கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பின்னலாடை தொழிலும், அதனை சார்ந்த உப தொழில்களும் தங்களுடைய கூலி கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதனிடையே பின்னலாடை தொழிலாளர்களுக்கான ஊதியமும் உயர்த்தி அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பின்னலாடைகளுக்கான விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய பனியன் உற்பத்தியாளர் சங்கம், பின்னலாடைகளுக்கான விலையை நவம்பர் 15-ந்தேதி முதல் 15 முதல் 20 % வரை உயர்த்த முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிஙிமிசி இன் இந்த அறிவிப்பானது சற்றே அதிர்ச்சிகரமாக இருந்தாலும், இது முழு ஜவுளித் துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது என்கிறது ஒரு தரப்பு. இதற்கிடையில் செயற்கை இழைகள் மற்றும் நூல்களுக்காக ஜிஎஸ்டி விகிதங்கள் 18%ல் இருந்து 12% ஆக குறைத்துள்ளது. இதனால் ஜவுளித் துறையில் ஜிஎஸ்டி வரி விகிதம் என்பது ஒரே மாதிரியாக ஒரே அளவில் இருக்கும்.

இதே போல் காலணிகளுக்கான ஜிஎஸ்டி விகிதமும் 5% முதல் 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 1,000 ரூபாய் வரையிலான காலணிகளுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜனவரியில் இருந்து காலாணிகள், ஜவுளித் துறையில் சில ரகங்களும் விலை அதிகரிக்க இது வழிவகுக்கலாம்.


No comments

Thank you for your comments