நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அனைத்துப் பள்ளிகளும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
அந்தவகையில் காஞ்சிபுரம் முத்து செட்டியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வந்த மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவும் திரவம் முக கவசம் மற்றும் பன்னீர் தெளித்து பூக்கள். இனிப்புகள் கொடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது பெற்றோர்களுடன் வந்தனர் பள்ளியில் கொடுத்த வரவேற்பு மூலம் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.



No comments
Thank you for your comments