Breaking News

ஹோட்டல்களில் அரங்கேறிய ‘கண்துடைப்பு’ சோதனை

வேலூர், நவ.1-

எளியவர்களை கண்டால் எள்ளி நகையாடுவது, வலியவர்களை கண்டால் வலைந்து கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை மிக சிறப்பாக கடைபிடிக்கின்றனர் என்று அதிகாரியின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர். இதனையே உறுதி செய்யும் வகையில் கடந்த வாரம் வேலூரில் நடைபெற்ற ஹோட்டல்களில் அதிரடி சோதனை அம்பலப்படுத்தி உள்ளது.  வழக்கம் போல் கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றி சிறிய ஹோட்டல்களில் சோதனை செய்து சீல் வைத்தனர், அபராதம் விதித்தனர். பெரிய  ஹோட்டல்களில் சோதனை செய்தது குறித்த தவலகள் ஏன் வெளிவரவில்லை... என்ற கேள்வியை தற்போது எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்... 


வேலூரில் உள்ள சில ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. சுகாதார துறையினர், ஹோட்டல்களில் முறையான ரெய்டு நடத்தாததால் விதி மீறல்கள் அதிகரித்து உணவு விஷமாகும் அபாயம் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால், பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உட்பட பல்வேறு வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. அங்கு உண்போருக்கு உடல் நலம் கேள்விக்குறியாக உள்ளது. 

சாலையோர கையேந்திபவனிலே சுகாதாரமான தரமான உணவுகள் வழங்குகின்றனர்... தட்டுகளில் இலை பயன்படுத்துகின்றனர். ஆனால்   கொள்ளை லாபம் பார்க்கும் சில பிரபல ஹோட்டல்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில்லை.... என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் தரப்பில் வலுவாக உள்ளது.  

ஒரு சில பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் இடத்தை, மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டாலும், உணவு தயாராகும் இடங்கள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் தான் காணப்படுகின்றன.

பாத்திரங்களை முறையாகக் கழுவுவதும் கிடையாது. உணவுப் பண்டங்களில் ஈ மொய்த்த வண்ணம் உள்ளன. வடை, சிக்கன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், மீண்டும் மீண்டும் பிற சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமின்றி பெரும்பாலான ஹோட்டல்களில், மலிவானவிலையில் இறந்த கோழிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ரசாயனம் கலந்த மீன்களை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

அரசால் தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணங்களை, உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. தின்பண்டங்களில் சில்வர் லீப், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் பெரும்பாலான ஹோட்டல்களில் செயற்கை வண்ணங்கள், ஆபத்தை விளைவிக்கும் ருசிகூட்டும் பொருட்கள் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வேதனையாக உள்ளது..

சிக்கன் லாலிபாப் போன்ற உணவுகளுக்கு புட் கலர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுக்கு சுவைகூட்டும் ரசாயணம் பெரிய ஹோட்டல்களில்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால புட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. ரசாயணம் கலந்த உணவு என்பது ஸ்லோ பாய்சனாக மாறி பல நோய்களை உருவாக்கி மனிதர்களை சிறுக சிறுக கொல்லுகின்றன...
எங்கே செல்கின்றன சுகாதாரம்... புறகணிக்கப்டுகின்றனவா விதிமுறைகள்... என்ற பல்வேறு கேள்விகள் இங்கே எழுகின்றன....  

இது போன்ற செயல்களுக்கு முக்கிய காரணம் அதிகாரிகள் “ப” வைட்டமின் பெற்றுகொண்டு கண்டும் காணாமல் விட்டுவிடுவதே என்று சமூக ஆர்வலர்கள் பலமாக குற்றம் சாட்டுகின்றனர்...  மாதம் தவறாமல் மாமூல் வசூலிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உலாவருகின்றன...

ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! என்ற தலைப்பில் காலச்சக்கரம் நாளிதழில் மக்களின் கருத்துகளை தொகுத்து நிருபர் டைரி பக்கத்தில் கடந்த 25/10/2021 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். 

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ராஜேஷ், கந்தவேல் ஆகியோர் வேலூர் காந்திரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒவ்வொரு ஹோட்டலாக சென்று தரமான உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 ஹோட்டல்களில் சுகாதாரம் இல்லாத உணவுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த ஹோட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். மேலும் பாபு ராவ் தெருவில் உள்ள ஒரு வட மாநில உணவு வகைகள் தயாரிக்கும் ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அந்த ஹோட்டலில் உள்ள கழிவறையில் விற்பனைக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த உணவுகளை அழிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் அந்த ஹோட்டலை மூடி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுகாதாரமற்ற முறையில் ஒரு ஹோட்டலில் உணவு தயாரிக்கப்பட்டது. அதை மூடி சீல் வைத்துள்ளோம். ஹோட்டல்களில் தரமான உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கண்துடைப்புக்காக மட்டும் ஆய்வு நடத்தி, அவ்வப்போது கணக்கு காண்பிப்பதாக பொதுமக்கள் தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டன.  அந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றார் போல்தான் இப்போது நடைபெற்ற ஹோட்டல்களில் அதிரடி சோதனை நாடகம் என்று பொதுமக்கள் தரப்பில் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளனர்.

சிறிய அளவிலான ஹோட்டல்களில்தான் சோதனை நடைபெறும்... பெரிய ஹோட்டல்களில் பெரிய அளவில் விதிமீறில்கள் கலப்படம் என கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.... ஆனால் அங்கெல்லாம் சோதனை நடைபெறுவதில்லை... ஏன்..? என்ற கேள்வியை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், சிறிய அளவிலான ஹோட்டல்களின் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். 

எளியவர்களை கண்டால் எள்ளி நகையாடுவது, வலியவர்களை கண்டால் வலைந்துகொடுத்து செல்வது என்ற தாரக மந்திரத்தை மிக சிறப்பாக கடைபிடிக்கின்றனர் என்று அதிகாரியின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனையே உறுதி செய்யும் வகையில் கடந்த வாரம் வேலூரில் நடைபெற்ற ஹோட்டல்களில் அதிரடி சோதனை அம்பலப்படுத்தி உள்ளது. 

வழக்கம் போல் கண்துடைப்பு நாடகம் அறங்கேற்றி சிறிய ஹோட்டல்களில் சோதனை செய்து சீல் வைத்தனர், அபராதம் விதித்தனர். பெரிய  ஹோட்டல்களில் சோதனை செய்தது குறித்த தவலகள் ஏன் வெளிவரவில்லை... என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்... 

“யார் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன... 
என் வீட்டில் அடுப்பெரிந்தால் போதும்...  
என்ற கொள்கையோடு ஆய்வு என்கின்ற பெயரில் “ப” வைட்டமின் பெற்றுகொண்டு “காசு பணம் துட்டு மணி மணி”  என்கின்ற நோக்கில்  கல்லா கட்டுகின்றனர் சிலர்... கண்துடைப்புக்காக மட்டும் அவ்வப்போது ஆய்வு நடக்கின்றன என்ற குற்றச்சாட்டும் மீண்டும் மீண்டும் பலர்தரப்பில் எழுந்துள்ளது. 

மாவட்ட ஆட்சியர் சிறிய அளவிலான ஹோட்டல்களில் மட்டும்தான் சோதனை செய்ய உத்தரவு பிறப்பித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது... 

அதுமட்டுமின்றி செய்திதாள்களில் செய்தி வெளியானால் அதையும் காண்பித்து  அதிகாரிகள் கல்லா கட்டுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தவறை சுட்டுகாட்டும் செய்திதாள்களை கலங்கப்படுத்தும் வகையில் அதிகாரிகள் கல்லா கட்டுவதாக தகவல்கள் வெளியாவது வேதனையாக உள்ளது... 

சமூதாய நேர்நோக்கு பார்வையோடு செய்திகள் வெளியிட்டால் அதை காண்பித்து சிறிய அளவில் சோதனை செய்து பெரிய அளவில் கல்லா கட்டியுள்ளாதாக தற்போதும் தவகல் கசிந்துள்ளது. இதன் உண்மை நிலை என்னவென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. 
பாரபட்சமின்றி பெரிய ஹோட்டல்களிலும் ஆய்வு செய்ய 

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.  மாவட்டம் முழுவதும், அதிரடி சோதனை செய்து சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அது போன்ற ஹோட்டல்களுக்கு அபராதம் மட்டும் விதிக்காமல், அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும், சீல் வைக்கவேண்டும்,  உரிமம் ரத்து செய்யவேண்டும் என்று வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  


பொதுமக்ககள் உணவு தொடர்பான புகார்களுக்கு, புகார் தெரிவிக்க வேண்டிய Whatsapp Number: 9444042322.

No comments

Thank you for your comments