Breaking News

வேலூரிலிருந்து இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

 வேலூர்:   

வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் இன்று முதல்  (01.11.2021)  நவ.3ம் தேதி வரை 3 நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சிக்கு 5, பெங்களூருக்கு 10 பஸ்களும், ஓசூருக்கு 20, தருமபுரிக்கு 5 பஸ்களும், சென்னைக்கு 75 பஸ்களும் இயக்கப்படும். மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

தீபாவளிக்கு பின்னர் நவ.5ம் தேதி முதல் நவ.8ம் தேதி வரை கூடுதலாக திருப்பத்துர், வேலுர் ஆற்காடு ஆகிய இடங்களிலிருந்து பெங்களுருக்கு 20 பஸ்களும், சென்னைக்கு 100 பஸ்களும் ஓசூருக்கு 30 பஸ்களும் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments