தீபாவளி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் காஞ்சி காமாட்சியம்மன்
காஞ்சிபுரம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து தீபாவளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த காஞ்சி காமாட்சி அம்மன். காலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெந்தய கலர்பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மனோரஞ்சிதம் பூ, சம்பங்கி பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து மேளதாளங்கள் முழங்க காமாட்சி அம்மன், லஷ்மி, சரஸ்வதி, தேவியருடன் உலா வந்தார்.
கோவில் கோபுர வாசலில் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு ஒளிக்க தீபாராதனைகள் செய்யப்பட்டு உற்சவ மண்டபம் வரை உலா வந்த காமாட்சி அம்மனை திராளான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவில் பிரகாரத்தில் உலா வந்து தீபாவளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
No comments
Thank you for your comments