Breaking News

பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி ஸ்வாகா..!

சென்னை, நவ.11-

அதிமுக ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி ஸ்வாகா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 1000 கோடி ஸ்வாகா, குடிமராமத்து திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாகா என அதிமுகவின் முன்னாள் ஐடி நிர்வாகி ஆஸ்பயர் சாமிநாதன் டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் செயலாளராக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் ஆஸ்பயர் சாமிநாதன் . அதன் பின்னர் ஓ.பி.எஸ். அணியின் ஓப்பனிங் பாட்ஸ்மேனாக இருந்தார், இப்போது ஒன்றுமில்லாமல் இருக்கிறார், அதிமுகவை சபித்தபடி.

சென்னையில் கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் அதிமுக பங்கு குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆஸ்பயர் சாமிநாதன் டுவிட்டர் மூலம் வெளியிட்ட பயர் இது.

பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஆயிரம் கோடி ஸ்வாகா, 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 1000 கோடி ஸ்வாகா, 

குடிமராமத்து திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஸ்வாகா.

அடப்பாவிகளா...

 50 ஆண்டு அதிமுக வரலாறு ஐந்தே ஆண்டில் ஸ்வாகா 

ஊரே சும்மா மெதக்குதுல்ல? 

என ஆஸ்பயர் சாமிநாதன் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்

No comments

Thank you for your comments