Breaking News

440 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம்: 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளர்- உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 440 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இளைஞரணி துணை அமைப்பாளர் டாக்டர் சோபன் குமார் ஏற்பாட்டில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் ஏழை குடும்பங்களுக்கு மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி காய்கறிகள் பிரட் பாக்கெட் போன்றவைகளை வழங்கினார். 

மேலும்  இந்நிகழ் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நகர செயலாளர் சன் பிராண்ட். கே.  ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன் நகர அவைத்தலைவர் சந்துரு ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார் பூபாலன் மற்றும் எஸ் கே பி சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்,நகர துணை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments