மர்மான முறையில் இறந்த தொழிலாளி சடலமாக மீட்பு - இருவர் கைது
அரூர், நவ. 27:
ஆந்திராவில் செம்மரம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அரூரை சேர்ந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை அன்று கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி மெதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் (40). தொழிலாளியான இவரது சடலம், சித்தேரி பேருந்து நிறுத்தப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீஸார் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ பின்னணி என்ன?
அரூரை அடுத்த சித்தேரி மற்றும் சிட்லிங் வட்டாரப் பகுதியிலுள்ள தொழிலாளர் சிலர் அண்மையில் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் பணிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதில், சித்தேரி ஊராட்சி மெதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராமன் என்பவர் ஆந்திராவில் மர்மான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தொழிலாளி ராமனின் சடலத்தை எடுத்து வந்த மர்ம நபர்கள் சித்தேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசியுள்ளனர். இது குறித்து காவல் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இருவர் கைது :
மர்மான முறையில் உயிரிழந்த தொழிலாளி ராமனின் சடலத்தை ஆந்திராவில் இருந்து காரில் எடுத்து வந்தது சித்தேரியில் வீசியது போலீஸாரின் விசாரணையில் தெரிவந்தது.
![]() |
கார் உரிமையாளர் சண்முகம் புகைப்படம் |
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அரூரை அடுத்த சுமைதாங்கிமேடு கிராமத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர் சண்முகம் (47), இவரது கார் ஓட்டுநர் எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் பார்த்திபன் (22) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
கார் ஓட்டுனர் பார்த்திபன் புகைப்படம் |
கைதான இருவரிடமும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கலைச்செல்வன் விசாரணை மேற்கொண்டார். மேலும், செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக மெதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகன், ஊமத்தி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தமலை, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, மாதையன் ஆகிய 4 பேரும் ஆந்திராவில் அந்த மாநில போலீஸாரின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2015-ல், செம்மரம் கடத்தல் சம்பவம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர போலீஸôர் சுட்டுக்கொன்றனர். இதில், சித்தேரி ஊராட்சி அரசநத்தம், கலசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments