38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
கோவை
கோவை மேற்கு மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் நகரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் கந்தசாமி, நிர்மலா, வேளாங்கண்ணி, உதயரேகா, ஹேமலதா, சாந்தி, மசூதாபேகம், கவிதா, நிர்மலா, ராஜவேல், கீதா ஆகியோர் கோவை சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு மண்டல மாவட்டங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சரவணன், பழனியம்மாள், கதிர்வேல், தண்டபாணி, பாலமுருகன், சசிகலா, பாண்டியம்மாள், முத்தமிழ்செல்வன், வேலுதேவன், யசோதாதேவி, சாந்தமூர்த்தி, விக்னேஸ்வரன், சரவணன், தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவை நகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் பணியாற்றிய கணேசன், தங்கவேல், ரவி, தெய்வசிகாமணி, சந்திரலேகா ஆகிய காவல் ஆய்வாளர்கள் சேலம் நகர், சேலம் சரகத்துக்கு மாற்றப்பட்டனர்.
மேற்கு மண்டல மாவட்டத்தில் மொத்தம் 38 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments