Breaking News

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம்  ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி அவர்களிடம் வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் முதற்கட்டமாக 1000 குடும்பங்களுக்கு பயன்படும் வகையில் மளிகை பொருட்கள், போர்வைகள், பாய்கள் மற்றும் தார்பாய்கள் நிவாரண பொருட்களாக அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேசன் எந்த ஒரு இயற்கை பேரிடர் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு உதவுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ளதாக 25 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை தன் குடும்பமாக நினைத்து இந்த செயலை செய்து வருவதாக உலகளாவிய கொள்கையான மானுடத்திற்கான முன்னேற்றம் என்ற அடிப்படையில் தமிழக அரசு மற்றும் மக்களுடன் இணைந்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர்கள் செய்து கொண்டிருப்பதாக  தெரிவித்தனர். 

சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையான நிறுவனமாக ஹுண்டாய் விளங்கி வருகிறது.  சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகமப்படுத்துவதில் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமங்களிலும் சென்றடையும் வகையில்  மருத்துவ சேவை,  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகான பயிற்சி, சாலை பாதுகாப்பு பிரச்சாரம், நிவாரண பணிகள் என அரசுக்கு உதவிகரம் பெறும் வகையில் ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவல், வெண்டிலேட்டர் தயாரிப்பு, முகக்கவசம் வினியோகம், கோரானா போராளிகளின் குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்குதல், கல்வியில் உதவிகரம், பள்ளிகள் புனரமைப்பு, கோரானா பாதிப்பு காலகட்டங்களில் நாடெங்கும் உள்ள நலிந்த பிரிவினர் இருக்கும் நமது தொழிற்சாலையை சுற்றியுள்ள பொருட்கள் விநியோகம் செய்வதில் ஹுண்டாய் மோட்டார் பவுண்டேஷன் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்து வருகின்றனர் என தெரிவித்தனர். 

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, திட்ட இயடாக்டர் ஸ்ரீதேவி, ஹுண்டாய் மோட்டார் பவுண்டேஷன் அரங்காவலர்கள் ஸ்டீபன்சுதாகர், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments