Breaking News

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்கள்

ஈரோடு :

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மொத்தம் 285 மனுக்கள் வரப்பெற்றன. 

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான ஆதிஷேசன் என்பவரின் மனைவிக்கு  கருணை அடிப்படையில்  இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணையினை வழங்கினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், உதவி ஆணையர் (கலால்) ஜெயராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் மற்றும்  அனைத்து துறை அலுவலர்களும்  கலந்து கொண்டனர்.

💮💮💮💮💮💮💮

ஈரோடு மாவட்ட புதிய ஆணையாளராக  கடந்த 25.11.2021 அன்று கே. சிவகுமார்  பொறுப்பேற்று கொண்டார்.  அதன் பின்னர் அவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  திருமகன் ஈவெரா அவர்களை அவரது குடியரசு  இல்லத்தில் மரியாதை நிமித்தமாக  சந்தித்து வாழ்த்துக்களை  பெற்றுக் கொண்டார்.


No comments

Thank you for your comments