Breaking News

நாவலூர் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு....

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் பகுதியில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகின்ற நிலையில் மங்களூர் ஒன்றியம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதிகமான பாதிப்படைந்த பகுதிகளை மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்  சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனடிப்படையில் மங்களூர் ஒன்றியத்தில் வடிகால் பகுதியாக அறிவிக்கப்பட்டு ள்ள நாவலூர் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆவினங்குடி முதல் நாவலூர் வரை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை ஆய்வு செய்தார்.   தொடர்ந்து அந்த இடத்தில் மேம்பாலம் விரைவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். 

அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிவளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதையும், கட்டிடத்தின் மேல் தளம் நீரால் கசிவதையும், சமையலறை கட்டிடம் இல்லாமல் வெளியில் சமைத்து வருவதையும் ஆய்வு செய்த அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். 

மாணவர்களின் கல்வி நலன் எந்த சூழ்நிலையும் பாதிப்படைய கூடாது என்றும், உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து எந்தந்த ஊராட்சியில் பள்ளி கட்டிடங்கள் நீரினால் கசிவு ஏற்பட்டு மாணவர்கள் உட்கார முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது என்பதனை கணக்கிட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து உடனடியாக பணியை தொடங்க        வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் நாவலூர் ஊராட்சி முழுவதும் மழை நீர் வீட்டிற்குள் சென்று அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ள சூழ்நிலையை நேரில் கண்ட அமைச்சர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  நிவாரணம் வழங்கினார். 

மங்களூர் ஒன்றியத்தில் நாவலூர் ஊராட்சி பின்தங்கிய மழைநீர் வடிகால் பகுதியாக  உள்ள காரணத்தினால் இந்த ஊராட்சியினை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க மங்களூர் ஒன்றிய சேர்மனுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகமணி,மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி        சுகுணாசங்கர், துணைச்சேர்மன் கலைச்செல்வி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு,ஊராட்சி மன்ற தலைவர் செல்வம்பாள் பழனிவேல், தலைமை ஆசிரியை ஜெயக்கொடி ஆசிரியர்கள் வீரமணி, இளங்கோவன், பழமலைநாதன், மகாலட்சுமி    கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உதவியாளர் வெள்ளிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments