12 மாநிலங்களவை எம்பிக்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்... அரசு தரப்பில் வலியுறுத்தல்
புதுடெல்லி, நவ.30-
குளிர்கால கூட்டத்தொடர் முழுமைக்கும் அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்பிகள் 12 பேரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. எம்பிக்கள் மன்னிப்புக் கேட்டால் அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மாநிலங்களவை இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது.
மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்த ஒரு பிரச்சனையை எழுப்பினார். மாநிலங்களவை உறுப்பினர்களை விதி 256 எனக்கு தற்காலிக நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றுவது அப்பட்டமான விதிமீறல் ஆகும் மாநிலங்களவை விதி 753 ஒழுங்குமுறை பிரச்சனை ஒன்றை எழுப்ப விரும்புகிறேன் என்று கார்கே கூறினார்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
ஒழுங்குமுறை பிரச்சனை எழுப்ப விரும்பும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டியதுதான் முறையாகும் ஆனால் எனக்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
முறைதவறிய நடவடிக்கைக்காக உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தீர்மானத்தை அன்றே தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக உறுப்பினர் செய்த தவறுகள் குறித்து குறிப்பிட்டு அவரை அவையிலிருந்து வெளியேற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரையும் தற்காலிக நீக்கம் செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார்
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி அவையில் நடந்த செயல்களுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் நடத்தப்படுவதாக கூட தோன்றவில்லை நீங்கள் ஏன் அவர்களை திரும்ப அவையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எதிர்க்கேள்வி கேட்டார்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மல்லிகார்ஜுன் கார்கே முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, ஆர் ஜே டி, இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் அவையில் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரம் கழித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டிரேக் ஓ பிரியன் எழுந்து பேசினார்.
அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.
சென்று மழைக்காலக் கூட்டத்தொடர் முழுமையும் உறுப்பினர்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பு அல்ல ஆளுங் கட்சி எம்பிக்கள் தான் பொறுப்பு ஆவார்கள்.
அவையில் முறைதவறி நடந்ததற்காக உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பது பேரையும் அவைத்தலைவர் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக எதிர்க் கட்சி எம்பிக்கள் 12 பேரை அவைத்தலைவர் தற்காலிக நீக்கம் செய்து இருக்கிறார்.
எதிர்க் கட்சி எம்பிக்கள் 12 பேரையும் தற்காலிக நீக்கம் செய்து இருக்க கூடாது என்று ஓ பிரியன் பேசினார்.
இவ்வாறு பேசிவிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வெளிநடப்பு செய்வதாக திருநாமம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினார்கள் அவையில் இருந்து அவர்களும் வெளியேறினார்கள்.
எதிர்க்கட்சிகளின் முதல் குழு வெளியேறிய பிறகு தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜி.கே. வாசன். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே. சி.ராமமூர்த்தி தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து விளக்கினார்கள் ஆந்திர மாநில உறுப்பினர் விஜய சாய் ரெட்டி மாநிலத்துக்கு நிவாரண தொகுப்பு நிதியாக ரூ 1000 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர் நரேந்திர ஜாதவ் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் அபாயம் குறித்து பேசினார்.
இன்று காலை எதிர்க் கட்சி எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தது தொடர்ந்து
ட்விட்டரில் பதிவு ஒன்றை பிரகலாத் ஜோஷி வெளியிட்டார்.
மாநிலங்களவையை முறையாக நடத்த அரசு விரும்புகிறது. இதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கூறினாலும் அரசு வரவேற்கத் தயாராக உள்ளது.
எங்கள் கட்சி ஜனநாயக கட்சி அதன் தலைவர் ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.
12 எம்பிக்களும் மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி அவையில் நடந்த செயல்களுக்காக மாநிலங்களவைத் தலைவர் இடம் முதலில் மன்னிப்பு கோர வேண்டும் அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர்களை அவையில் மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த டிவிட்டர் செய்தியை நிராகரிப்பதாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
அதன் பிறகு மாநிலங்களவை ஒத்திவைக்கப்படும் முன்னால் அவைத்தலைவர் பியூயஸ் கோயல் மாநிலங்களவையில் பேசினார்.
அவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 12 எம்பிக்களும் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அவையில் செய்த செயல்களுக்கு முதலில் அவைத் தலைவரிடம் மன்னிப்பு கோரவேண்டும் அவையில் மீண்டும் மன்னிப்பு கோரவேண்டும்.
அவையில் நடந்த செயல்களுக்காக இந்திய நாட்டு இடம் மன்னிப்பு கோரவேண்டும் என்று கூறினார்.
12 எம்பிக்களையும் ஒழுங்கு நடவடிக்கை என்ற முறையில் அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது முறையான செயல் தான் அவை விதிகளுக்கு விரோதமானது என்று கூறி அவையின் கண்ணியத்தை மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தான் குறைத்து விட்டார் என்று கோயல் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில் அவையை நடத்த விரும்பவில்லை அதனால் புதன்கிழமை காலை வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஹரிவனஸ் நாராயணன் சிங் கூறினார்.
மக்களவை ஒத்திவைப்பு
பெரும்பான்மையான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் அவையை நடத்துவதற்கு மக்களவைத் தலைவர் முயற்சி செய்தார். அவையே இரண்டு முறை ஒத்தி வைத்தார்.
அவையில் இருந்து கொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காக்க அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் கோஷம் ஓயவில்லை. மாலை 3.14 மணி அளவில் அவையே புதன்கிழமை காலை வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
Rahul ji, will you endorse the unruly behaviour of MPs even after seeing this picture which tarnishes the dignity of the House?You must apologise for the violence in the House.You must apologise for insulting the Chair, the House and the nation!#WinterSession pic.twitter.com/kB2uzw4xwf— Pralhad Joshi (@JoshiPralhad) November 30, 2021
The opposition parties unitedly condemn the unwarranted & undemocratic suspension of 12 Rajya Sabha MPs who were demanding a discussion on the Farm Bills.
— Leader of Opposition, Rajya Sabha (@LoPIndia) November 29, 2021
We will resist this authoritarian decision of the Govt and defend India’s democracy. pic.twitter.com/I69hzsew9E
No comments
Thank you for your comments