4 கொள்ளையர்கள் கைது - ரூ.17.50 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் நகைகள் மீட்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுதர்சன் நகரில் வசிக்கும் கவிதா க/பெ.ராஜு, என்பவர் 03.09.2021 அன்று வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பிறகு அன்று மாலை வீட்டிற்கு வந்துபார்த்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 43 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து, காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுக்கா போலிசார் கை விரல்ரேகை நிபுணர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்..சுதாகர் அவர்களின் உத்தரவின்படி காவல் ஆய்வாளர் ராஜகோபால் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதில்
1 ) மனோஜ் ( 35 ) த / பெ.ஜேக்கப், நெ.127/D.அம்மன் நகர், சேலம்,
2) ராஜாராம் (26) த/பெ.கண்ணன், நெ.01/04 மேலதெரு, கீழடி, திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்.
3 ) கார்த்திக் ராஜா ( 24 ) த / பெ.கண்ணன், நெ .01/04 மேலதெரு, கீழடி , திருப்புவனம் , சிவகங்கை மாவட்டம் மற்றும்
4 ) திலிப் திவாகர் (26) த / பெ.விருமாண்டி, 2 வது தெரு, சூரியா நகர், நிலக்கோட்டை தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம் ஆகியோர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர்களை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து 43 சவரன் தங்க நகைகள் மீட்டகப்பட்டு எதிரிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
No comments
Thank you for your comments