மாநகராட்சி பணியாளரை தாக்கியதால் பரபரப்பு.... காவல் நிலையத்தில் புகார்!
காட்பாடி :
காட்பாடியில் மாநகராட்சி பணியாளரை தாக்கியதால் பரபரப்பு சக ஊழியர்கள் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார்..
வேலூர் மாவட்டம் காட்பாடி 1வது மண்டலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர் சுந்தரமூர்த்தி, காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து வந்துள்ளார். அங்கு உள்ள சக்தி விநாயகர் மளிகை கடை அருகே இருந்த கால்வாய் கழிவுகளை வெளியேற்றும் போது மளிகை கடை உரிமையாளர் வியாபார நேரத்தில் கழிவுகளை அகற்ற வேண்டாம் என்று கூறி தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
மளிகை கடை உரிமையாளர் மாநகராட்சி ஊழியர் சுந்தரமூர்த்தியை கல்லால் தாக்கி காயங்கள் ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஏராளமானோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பிரேம்குமார் அவர்களிடம் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் சக்தி விநாயகர் மளிகை கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவை கொடுத்தனர்.
இதனால் துப்புறவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் பிரேம்குமார் காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தார் சக ஊழியர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
No comments
Thank you for your comments