பாலாற்றில் சிறப்பு கலச ஸ்தாபன கங்கா பூஜை
ஆம்பூர் :
ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக 2 மாநிலத்தின் பாலாறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் இரு தரையை தொட்டவாறு செல்கிறது.
இதை வரவேற்கும் வகையில் பாலாறு மக்கள் இயக்கம் சார்பாக அதன் ஒருங்கினைப்பாளர் கோ. ஸ்ரி.ஜெய்சங்கர் தலைமையில் அன்னை பாலாற்றை வணங்கும் வகையில் கலச ஸ்தாபனம் செய்து, கங்கா பூஜை நடத்தி,கலச நீரை பாலாற்றில் கலக்கச்செய்து மலர்தூவி தீப ஆராதனை செய்து பாலாறு அன்னைக்கு நன்றி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அகில பாரத சந்நியாசிகள் அமைப்பின் செங்காநத்தம் அருள்திரு பகவதி சித்தர், அருள்திரு கிருஷ்ணாநந்த சுவாமிகள், அருள்திரு சிவ கங்காதரநந்தா சரஸ்வதி சுவாமிகள் , பாலாறு வெங்கடேசன், தேவலாபுரம் வெங்கடேசன், சிதம்பரம், சரவணன், ஆனந்தன், ஆறுமுகம், ஒம் சக்தி பாபு, சமூக ஆர்வலர் குணசீலன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொதுமக்கள் என கலந்துகொண்டு பாலாறு அன்னைக்கு தீபாராதனை செய்து வழிபட்டு வணங்கினர்.
No comments
Thank you for your comments