Breaking News

பெரிய கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு விரைவில் அறிமுகம்!

சென்னை  :

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட  46 பெரிய கோவில்களில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக மற்ற கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.

No comments

Thank you for your comments