Breaking News

சிறு வயது மாணவியை கூட்டிச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தருமபுரி  :

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தில் பாஸ்கர் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். வழக்கம்போல் மாணவி இருதினம் முன்  பள்ளிக்கு சென்றுள்ளார். 

பள்ளி முடித்து வீட்டுக்கு நீண்டநேரம் ஆகியும் வராததால் மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மற்றும் மாணவியின்  உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரித்ததில் தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறி உள்ளனர். அச்சமடைந்த பெற்றோர்கள் அரூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர் காவல்துறைக்கு ரகசிய தகவலின் பேரில் அரூர் அடுத்த பொண்ணேரி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட ஈட்டியம்பட்டி என்ற கிராமத்தில் இருவரும் உள்ளனர் என்று தகவல் தெரிந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் பின்பு பாஸ்கரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும்,  தங்களுக்கு பெற்றோர்கள்  எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் இருவரும் ஊரைவிட்டு சென்று விடலாம் என்று முடிவு எடுத்து 11 மணி அளவில் நாங்கள் இருவரும் பள்ளியிலிருந்து சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் பாஸ்கர்  கூட்டி சென்று மாணவிக்கு  சிறு வயது என்பதால் பாஸ்கர் மீது போக்சோ  வழக்குப்பதிவு செய்து அவரை தர்மபுரி மத்திய சிறைச்சாலையில் ஒப்படைத்தனர். பின்பு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

No comments

Thank you for your comments