Breaking News

வடிகால் வசதியின்றி சாலையில் புழுக்களுடன் தேங்கும் நீர்.... தொற்று பரவும் அபாயம்... பொதுமக்கள் அச்சம்...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே குளங்கள் நிரம்பி சாலையில் புழுக்களுடன் தேங்கி நிற்கும் நீரினால் சுகாதார குறைபாடு ஏற்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துமே எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக நீர்தேக்கங்களான ஏரி,குளங்கள் நிரம்பி வழிகின்றன.அந்த வகையில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள வள்ளி அம்மன்குளம் மற்றும் சங்கரன்குளம் என்கிற இரு குளங்கள் கடந்த 20நாட்களுக்கு முன்பு நிரம்பி அதிலிருந்து நீரினானது அக்கிராமத்தின் முக்கிய சாலையில் முட்டி அளவிற்கு தேங்கி நின்று கொண்டிருக்கிறது.

மேலும் அக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதுடன் புழுக்கள் உற்பத்தியாகி அதிக அளவில் தூர்நாற்றம் வீசி வருகின்றன.

மேலும் அந்நீரானது கிராமத்தின் நியாயவிலை கடை, ஒன்றிய நடுநிலை பள்ளி, அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் தேங்கி நின்று வருவதால் அந்நீரிலேயே கால் வைத்து சின்ஞ் சிறு குழந்தைகள் உட்பட பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் கடந்து சென்று வருகின்றனர்.

போதிய வடிகால் வசதியின்றி தேக்கம் அடைந்துள்ள அந்நீரினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அக்கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியரிமுமே குறைதீர்ப்பு நாளில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்று பலத்த குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர் அக்கிராம மக்கள்.

இதற்கு விரைந்து உடனடி நடவடிக்கை எடுத்திட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையானது  அக்கிராம மக்களிடையே வலுத்துள்ளது..

1 comment:

  1. குளம் நிரம்புவதும் நீர் வெளிவருவதும் புதிதில்லை புழுக்கள் உள்ள நீரில் குழந்தை கால்வைக்க கூசுகிறது மக்கள் அவதிபடுகிறார்கள் என்றால் அந்த மக்கள் சுயநலமாகும் படித்தும் முட்டாளாகவும் நீர்நிலையி குப்பைகளையும் கொட்டி அட்டூழியம் செய்வது அப்புரம் அரசாங்கத்தை குறைகூறி திரிவது நமது பகுதியை தாம்தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் குளக்கரையில் ஆக்கிரமித்து நீர்செல்ல வழிவிடாமல் தண்ணி நிக்குது,பன்னி நிக்குது என புலம்புவது !

    ReplyDelete

Thank you for your comments