கனமழையால் ததும்பும் நீர்நிலைகள்... விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி ....
காஞ்சிபுரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் காலை முதலே கனமழை பெய்ய தொடங்கியதால் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அளித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் தற்போது 30 நிமிடங்களாக காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்தரமேரூர், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்யத் துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழையால் 78 பொதுப்பணித்துறை ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில் தற்போது கனமழையால் மீண்டும் பல ஏரிகள் நிரம்பி துவங்கும் என்பதால் தற்போதைய பருவ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments