ஊராட்சிமன்ற தலைவர்கள் அறிமுகக் கூட்டம்
வேலூர், அக்.29-
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன் துணைத் தலைவர் சரவணன் ஆகியோரின் தலைமையில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகு மற்றும் நந்தகுமார் ஆகியோரின் முன்னிலையில் 40 ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
அதனை அடுத்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவது குறித்தும் மற்றும் காலி இடங்களில் மரக்கன்றுகள் நடுவது குறித்ததும் ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வேலூர் மாவட்டம் காட்பாடி வன்றந்தங்கள் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜெ.முத்துலட்சுமி குமார் வெற்றி பெற்றதை அடுத்து வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர், பொதுமக்களும் தங்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments