Breaking News

சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போலி பத்திர பதிவு...!

ஆம்பூர் :

வாணியம்பாடி அருகே சஞ்சீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பன்னீர் என்பவர் மணிக்கு தெரியாமலேயே கிரயம் பெற்று பின்னர் அதனை தனது மகன்களான சசிகுமார் மற்றும் சதீஷ்  ஆகியோரது பெயருக்கு கடந்த 20ம் தேதி தானமாக கிரையம் கொடுத்துள்ளார்.

மேலும் தனிநபர் மூலம் தயாரித்த பத்திரத்தை சார் பதிவாளர் சரிவர பார்க்காமல் பத்திர பதிவு செய்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நியாயத்தை பத்திரப்பதிவாளரிடம் கேட்ட போது ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நிலத்தின் உரிமையாளர் மணி வாணியம்பாடி சார் பதிவாளர் உமாபதி, போலி பத்திரம் தயாரித்த பன்னீர் அவரது மகன்கள் சசிகுமார், சதீஷ் ஆகியோர் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே போல் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சார்ந்த பேபி அம்மாள் என்பவர் இறந்து இரண்டு மாதம் ஆன நிலையில் பேபி அம்மாள் உயிருடன் வந்து தனது சொத்தை அஹமத் பாஷா என்பவருக்கு சொத்துக்கான பவர் கொடுத்ததின் மூலம் அவர் அந்த சொத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்த சம்பவம் நிகழ்ந்து. போலியான ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு நடைபெற்றது குறித்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் போலியான ஆவணங்கள் மூலம்  பத்திரப்பதிவு செய்து சொத்துக்கள் விற்கப்படும் நிலை வாணியம்பாடியில் தொடர் கதையாக உள்ளது.

சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் பத்திரப்பதிவாளர், பத்திர எழுத்தர், ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments