Breaking News

கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி வழங்கினார்

காஞ்சிபுரம், அக். 25 -

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் நிதியுதவியை வழங்கினார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. தமிழகத்தையை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில், பெற்றோரை இழந்து, தனிமைப்படுத்தப் பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் இதற்கான விழா நடந்தது. ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரொனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் 62 பேருக்கு, தலா ரூ.6 லட்சத்தை நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது.  

இந்நிழ்ச்சியில் திட்ட அலுவலர் ஸ்ரீ தேவி, எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ.,கள் சுந்தர், சி.வி.எம்.பி., எழிலரசன்,  மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி  குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments