காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது. காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர், எஸ்.பி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் ஹாட்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு மட்டும் நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் 377 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் அறுபத்தி மூன்று குண்டுகள் முழங்க காஞ்சி சரக டிஐஜி எம்.சத்யபிரியா , எஸ்.பி. சுதாகர் , துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
No comments
Thank you for your comments