கலங்கல் நீரை மலர்கள் தூவி வரவேற்றார் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமல் ஏரி நிரம்பியதை தொடர்ந்து, கலங்கல் நீரை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், B.E., B.L., MLA. அவர்கள் மலர்கள் தூவி வரவேற்றார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தொடர் முயற்ச்சியால், தாமல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் 12 கிலோ மீட்டருக்கு தூர்வார, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பக்கத்து மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாயையும் சேர்த்து தூர்வாரியதன் விளைவாக துரிதமாக தாமல் ஏரி நிரம்பியது. நீர்வரத்து கால்வாய் தூர்வாரிய பணிக்காக தாமல் ஊராட்சி மக்களும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
உடன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மார்கண்டேயன், தாமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இளஞ்செழியன், ஊராட்சி செயலாளர் மனோகரன், தாமல் பஞ்சாயத்து நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments
Thank you for your comments