காஞ்சிபுரம் அருகே புதுப்பிக்கப்பட்ட 5 அரசுப்பள்ளிகள் திறப்பு
காஞ்சிபுரம், அக்.21-
காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் புதுப்பிக்கப்பட்ட 5 அரசுப்பள்ளிகள் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
![]() |
சாலவாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசுப்பள்ளியின் வகுப்பறைகளை திறந்து வைத்து பேசுகிறார் உத்தரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர். |
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசுப்பள்ளிகள் 5 புதுப்பிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மற்றும் விழா மேடை ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டது.
விழாவிற்கு உத்தரமேரூர் சட்டப் பேரவை உறுப்பினர் க.சுந்தர் தலைமை வகித்து புதுப்பிக்கப்பட்ட அரசு வகுப்பறைக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
விழாவிற்கு ஹூண்டாய் இந்தியா மோட்டார் பவுண்டேஷன் அமைப்பின் அறங்காவலர்கள் எஸ்.கணேஷ்மணி,ஜெ.ஸ்டீபன் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை ஜி.எஸ்.ஜெயரூபி வரவேற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க.சுந்தர் பேசுகையில் படிப்பதில் மட்டும் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் விளையாட்டு உட்பட பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஹூண்டாய் நிறுவன அதிகாரி எஸ்.கணேஷ்மணி பேசுகையில் நிறுவனத்தின் சார்பில் தற்போது 5 அரசுப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது.மேலும் 2 பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதன் மதிப்பு ரூ.2.50 கோடி எனவும் பேசினார்.விழாவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவன அதிகாரிகள்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments