Breaking News

வங்கிகள் இணைந்து நடத்திய மெகா சிறப்பு கடன்மேளா

ராமநாதபுரம், அக்.25-

ராமநாதபுரத்தில் வங்கிகள் இணைந்து நடத்திய மெகா சிறப்பு கடன்மேளாவில் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம் ரூ.21.13 கோடி கடன் வழங்கினார். டி.ஆர்.ஓ.,காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நபார்டு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்களின் நலன் கருதி வாடிக்கையாளர் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். 

இந்த சிறப்பு கடன் வழங்கும் வங்கி முகாமில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மெகா வாடிக்கையாளர் சிறப்பு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

முகாமில் அனைத்து வங்கிகளும் தங்களது பல்வேறு திட்டங்களை காட்சிப்படுத்தியதோடு மட்டுமின்றி பயனாளிகளுக்கு கடன்களையும் வழங்கினர். பொதுமக்களின் வங்கி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த சிறப்பு முகாமில் விவசாய கடன், பிரதம மந்திரி முத்ரா கடன், சிறு குறு தொழில் கடன், அரசு மானிய கடன், வீட்டுக் கடன், கல்வி, வாகனம், தனிநபர் கடன்கள் தொடர்பான ஆலோசனைகள் அளிக்கப்பட்டது. மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்க்ஷா, பீமா யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி,  அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் இணைவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது.

🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! 
முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீராம் வரவேற்புரையாற்றினார். பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மாருதி ராவ் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் 400 பயனாளிகளுக்கு ரூபாய் இருபத்தி ஒரு கோடியே 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கான கடன்களை சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி செய்திருந்தது. முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.




No comments

Thank you for your comments