Breaking News

ஒரே நாளில் மது விற்ற 29 பேர் கைது

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் முழுவதும் மது விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 772 மது பாட்டில்களும், சுமார் 2 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மிலாது நபியையொட்டி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

இதில் மாவட்டம் முழுவதும் மது விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 772 மது பாட்டில்களும், சுமார் 2 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.



No comments

Thank you for your comments