கோனோரிகுப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனோரிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக சைலஜா சேகர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்கும் இந்நிகழ்ச்சி திருவிழாக் காட்சி அளித்தது.
வார்டு உறுப்பினர்கள் கார்த்திகேயன், சுஜாத்தா ராஜேஷ், மீனாட்சி மணிகண்டன் உள்ளிட்ட 9 பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், கோனோரிகுப்பத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் 100 மரக்கன்றுகளை தலைவர் சைலஜா சேகர் நடவு செய்தார்.
விழாவில் அரசு அதிகாரி, பொது மக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டதால், கோனோரிகுப்பம் திருவிழாபோல் காட்சி அளித்தது.
No comments
Thank you for your comments