கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி :
நலவாரிய செயல்பாடுகளை சீர் படுத்த கோரி தர்மபுரி மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி டபிள்யூ எஃப் ஐ மாவட்ட தலைவர் கலாவதி தலைமையில்,
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியத் தொகையை ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிடவும்,
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல், நலவாரிய கூட்ட முடிவிற்கு ஏற்ப அனைத்து பயன்பாடுகளும் உயர்த்தி வழங்கிடவும்,
இயற்கை மரணம் நிதி ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும்,
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியமும்,
கணவரை இழந்த நாள் முதல் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்,
கட்டுமான தொழிலாளிக்கு 4.9. 2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த கல்வி உதவி உள்ளிட்ட அரசாணை வெளியிடுக,
ஆன்-லைன் பதிவை எளிமை படித்திடவும்,
நேரடி பதிவை தொடர்ந்து விடவும்,
கட்டுமான நல வாரிய சட்டங்களை கறாராக அமுல் படைத்திடுவும்,
மாநிலம் முழுவதும் ஒரே சீரான முறையில் நலவாரிய பணிகளை மேற்கொள்ள ஏ சி எல் (எஸ் எஸ் எஸ்) களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments