Breaking News

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் போச்சம்பள்ளி மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாதுரை தலைமைவகித்தார். போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகர், மற்றும் துணை நிலைய அலுவலர் சீனிவாசன் பொது மக்களிடையே மழை, வெள்ளம் போன்ற பேரிடர் சீற்றத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தாங்களே எப்படி பாதுகாப்பது குறித்து   ஒத்திகை குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி பேசினார். 

தற்போது போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக பெரும்பாலான ஏரி, குளங்கள், குட்டைகள் ஆகியவை நிரம்பியுள்ளன. ஏரி, குளம் குட்டைகளில் பள்ளி மாணர்வர்கள் சிக்கி பெருமளவு உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு செயல் விளக்கம் அளித்தனர். 

இதில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் உயிர் பிழைக்க, கையில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு கரை சேருவது, தண்ணீரில் இருந்து மீட்பவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்து உயிர் பிழைக்க வைப்பது மற்றும் வருகின்ற தீபாவளி அன்று எப்படி பட்டாசுகளை வெடிக்க செய்வது. போன்றவை குறித்து, செயல் விளக்கம் பொது மக்களுக்கு செய்து காண்பித்தனர். மேலும், இயற்கை பேரிடர் போது, அரசின் சார்பில் வழங்கப்படும் ஆலோசனை, விழிப்புணர்வை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், அருண், லெனின், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவியாளர்கள் திருமால், பொன்ராஜ், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments