Breaking News

வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

திருவள்ளூர், அக்.25-

ஆந்திரா மாநிலம், சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறவுள்ளதை தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை என்று திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது, 

ஆந்திரா மாநிலம், சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறவுள்ளதை தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா மாநிலம், சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்த்தேக்கத்தின் முழுநீர் மட்ட அளவு (+) 281 அடி 22.10.2021 அன்று காலை 6.00 மணி அளவில் நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட அளவு (+) 279.45 அடி.

நீர்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநில அரசு திங்கட்கிழமை 25.10.2021 அன்று ஆந்திர மாநில சத்தியவேடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் அதிகபடியான உபரி நீரை திறந்துவிடுகின்றனர். இதனால், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே, ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆந்திர மாநில எல்லையான சுருட்டப்பள்ளி அணைக்கட்டுக்கு கீழ் உள்ள ஆரணியாற்றின் தமிழ்நாட்டின் எல்லையான ஊத்துக்கோட்டையில் இருந்து கீழ்கண்ட இருபுறமும் உள்ள கிராமங்களை கடந்து தண்ணீர் செல்ல உள்ளதால் கீழ்கண்ட கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இடதுபுறம் உள்ள கிராமங்களாவது, 

ஊத்துக்கோட்டை, தாராட்சி, கீழ்சிட்ரபாக்கம், மேல்சிட்ரபாக்கம், பேரண்டூர், 43 பனப்பாக்கம், பாலவாக்கம், இலட்சிவாக்கம், சூளைமேனி,  காக்கவாக்கம், சென்னாங்கரனை, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், செங்காத்தா குளம், பெரியபாளையம், பாலிஸ்வரம், நெல்வாய், மங்களம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, ஆர்.என்.குப்பம், மேல்முதலம்பேடு கீழ்முதலம்பேடு, அரியந்த்துறை, கவரைப்பேட்டை, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவணம், சின்னகாவணம், பொன்னேரி, தேவனஞ்சேரி, இலட்சுமிபுரம், லிங்கப்பயைன் பேட்டை, கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், திருவெள்ளவாயல், ஒன்பாக்கம், பிரளயம்பாக்கம், போளாச்சி அம்மன் குளம்,

வலதுபுறம் உள்ள கிராமங்களாவது, 

போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை,  மாம்பாக்கம்,  கல்பட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, பெரிபாளையம், ராள்ளப்பாடி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூர், பைவரன் குப்பம், வெள்ளோடை, பொன்னேரி, ஆலாடு, கொளத்தூர், குமார சிறுலப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, காட்டூ, கடப்பாக்கம், சிறுப்பழவேற்காடு, ஆண்டார்மடம், தாங்கல் பெரும்புலம்,

மேலே குறிப்பிட்ட ஆரணியாற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தரப்படுகிறது. 

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் என சம்பந்தட்ட துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.


No comments

Thank you for your comments