Breaking News

மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களை காட்டி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம்

சென்னை, அக்.25-

நவம்பர் 1ம் தேதி முதல், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் பழைய பஸ் பாஸ் காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



பழைய அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர் களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்படும் என்றும், புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 


No comments

Thank you for your comments